டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியதும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பரவலை கண்டுபிடிக்கும் முதல் கருவியாக ஒமிசுயர் பெயர்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பிறழ்வு தொற்றான ஒமிக்ரானை பகுப்பாய்வு மூலமே கண்டறிய முடியாது. இதனால் ஒருசில நாட்கள் தேவைப்படுகிறது. இதையடுத்து, ஒமிக்ரான் தொற்றை உடடினயாக கண்டுபிடிக்கும் வகையிலான கருவிகளை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

ஏற்கனவே  ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறியப் இந்தியாவில்,   அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் கருவி நிறுவனமான தெர்மோ ஃபிஷரால் உருவாக்கப்பட்டுள்ள கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இது மாறுபாட்டைக் கண்டறிய S Gene Target Failure (SGTF) உத்தியைப் பயன்படுத்துகிறது.

இந்த நிலையில், தற்போது  டாடா நிறுவன தயாரிப்பான ஒமிசுயர் எனப்படும் ஆர்.டி.பிசிஆர் கருவிக்கு ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்  அனுமதி வழங்கி உள்ளது.   இதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய பரிசோதனை கிட்டுக்கு ICMR ஒப்புதல் கிடைத்திருப்பதன் மூலம் ஓமைக்ரான் தொற்றை விரைவாக கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமைக்ரானுக்கு எதிரான சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு இது பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கருவி மூலம் 2 மணி நேரத்தில் ஒமிக்ரான தொற்று கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.