டெல்லி:
சிஐசிஐ வங்கி, தனது நிலையான வைப்பு விகிதங்களை குறைத்து அறிவித்து உள்ளது. இதுவரை 5.75 சதவிகிதம் வழங்கி வந்த வட்டியை 5.25 ஆக குறைத்துள்ளது.

தனியார் வங்கிகளில் முதலிடத்தில் உள்ள  ஐசிஐசிஐ வங்கி தற்போது,  பல்வேறு பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை  0.5 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள்  மே 11 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி,  ஒரு வருடம் வரை வைப்புத்தொகைக்கு 5.25 சதவீதம் வட்டி கிடைக்கும், ஒரு வருடத்திற்கு மேல் உள்ளவர்கள் 5.7 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வருமானம் ஈட்டுவார்கள் என்று ஐசிஐசிஐ வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.