ஜி.எஸ்.டி. எதிரொலி: புற்றுநோய் சிகிச்சை – டயாலிசிஸ் கட்டணம்  உயரும்

டில்லி:

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக டாயாலிசிஸ் மற்றும் புற்றுநோய் சிகிச்சை கட்டணங்கள் உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக அளிக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு  இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

டயாலிசிஸ் கட்டணங்கள் 5 முதல் 12 சதவிகிதம் வரையிலும், பேஸ்மேக்கர் சிகிச்சை 5.5 முதல் 18 சதவிகிதம் வரையிலும் உயரும். எலும்பு மற்றும் புற்றுநோய் மருத்துவத்துக்கான துணை பொருட்கள் 12 சதவிகிதம் வரை விலை அதிகரிக்கும்.

அதே நேரம், வேறொரு கேள்விக்கான பதிலில், “ உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அப்படியானால் டயாலிசிஸ் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்ச உயிர் காக்கும் மருத்துவம் இல்லையா” என்று ஆதங்கத்துடன் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ttps://www.patrikai.com/brahmins-face-social-justice-t-n-gopalan-series-3-why-brahmin/
English Summary
ialysis & Cancer treatment-cost-more-under-gst