பாலி,

ந்தோனேசியாவில் நடைபெற்ற மகளிர் வீல்சேர் பேஸ்கர் பால் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுவதுபோல, பாரா டிபிக்ஸ் போட்டிகளும் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த போட்டியில் ஊனமுற்ற பெண்கள் வீல்சேர் மூலம் பேஸ்கட் பால் விளையாடி சாதனை படைத்து வருகிறார்கள்.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் (ஜூலை) 28 முதல் 30, 2017 வரை நடைபெற்ற மகளிருக்கான 4 வது கோப்பை சர்வதேச  மகளிர் வீல்சேர் பேஸ்கட் பால் போட்டி  நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக மகளிர் அணி பங்கு பெற்றது. அங்கு நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணியை வென்று, வெண்கலம் வென்றுள்ளது. இந்த அணியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து  மொத்தம்12 வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணியின் தலைவி  வினோலியா வைலட் கூறியதாவது,

இந்தியா சார்பாக முதன்முறையாக இந்த போட்டியில் பங்கேற்றும். எங்களது வீல் சேர்களை கொண்டு செல்வதில் பிரச்சினைகள் எழுந்ததால், நான்கு நான்கு பேராக தனித்தனி விமானங்களில் செல்ல நேர்ந்தது என்று வருத்தமாக கூறினார்.

மேலும்,  ஏற்கனவே கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாங்கள் தனித்தனியாக விளையாடி வந்ததாகவும், தற்போது இந்த ஆண்டுதான் அணியாக செயல்பட்டு,  இரண்டு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு, பாலிகப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்த போட்டியில் பங்குபெறும் முன் சென்னை சத்தியபாமா யுனிவர்சிட்டியில் 15 நாட்கள் கடுமையான டிரெயினிங் எடுத்ததாகவும் அவர் கூறினார்

பாராட்டிபிக்ஸ் பெண்கள் அணி, தனது முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்று  இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளதாக கூறிய வயலர், இது தங்களுக்கு  சிறந்த அனுபவமாக இருந்தது, நாங்கள் ஒரு வெண்கலப் பதக்கத்தை வெல்ல முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தோம், என்றும் கூறினார்.

நாங்கள் இந்தோனேசியா சென்று வர தேவையான உதவிகளை சென்னையில்  உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் செய்து கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தியது என்றும் கூறினார்.