டில்லி:

ந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அவரை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை கேபினட் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பபட்டுள்ளது.

இன்று மாலை  6.30 மணிக்கு  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

(பைல் படம்)

நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அபிநந்தனை பத்திரமாக இந்தியா விடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம்  மத்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.