இந்தியாவை பெருமையடைய செய்வேன்: கமல்

Must read

சென்னை,

சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளையை தொடங்கி வைத்த நடிகர் கமலஹாசன், இந்தியாவை பெருமைய செய்வேன் என்று கூறினார்.

புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அடுத்த மாதம் 21ந்தேதி புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில்,  சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்பு ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய சேவைகள் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்றும்  அவற்றையெல்லாம் டிஜிட்டல்மயமாக்கி முறைப்படுத்துவேன் என்றார்.

மேலும், . அடுத்த மாதம் தொடங்கும் அரசியல் பயணத்தில் இன்னும் நிறைய தோழர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்றும்,  என் ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் என்றும், இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும் என்றும்  கமல் தெரிவித்தார்.

More articles

Latest article