சென்னை: ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன் என அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கூறினார். மேலும் பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.
இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்பட முடியவில்லை என கடந்த 4ஆண்டுகளாக அதிமுக தொண்டர்கள் கூறி வந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்கும் வகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர், இதையடுத்து, அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றங்களை நாடினார். ஆனால், அவரது வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிமுக பொதுக்குழு கூடியது.
இந்த பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அவரது பொருளாளர் பதவியும் பிடுங்கப்பட்டது. இதனால், அதிமுக தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கிருந்த கட்சி சம்பந்தமான ஆவணங்களை எடுத்துச்சென்றார். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், என்னை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. நான் அறிவிக்கிறேன். ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன் என்றார்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும், பொதுச்செயலாளர் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். `கட்சி சட்டவிதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு என ஓபிஎஸ் தெரிவித்தார்.”
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…