கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால், எதிர்க்கட்சிகளின் இண்டி  (INDIA) கூட்டணி கலகலத்துபோய் உள்ளது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையில் 28 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஆனால், இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால், அவர்களால் பிரதமர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில்,  மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ம்தா,, “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி மற்றும் மேற்குவங்கத்தில் இருக்கிறோம். நாங்கள் தனியாகவே பாஜகவை தோற்கடிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும், நாங்கள் எதிர்க்கட்சிகளின்  இண்டி கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்று கூறியவர், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு கிடையாது! நிதிஷை தொடர்ந்து மம்தாவும் மிரட்டல்…