க்னோ

குஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை  விடுத்துள்ளார். 

மத்திய அரசு பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்

தனது எக்ஸ் தளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில்,

“நம் நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடி சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். இந்த நீதி மற்றும் சமத்துவ வாழ்வைக் கொடுத்த மக்களின் தலைவர் கர்பூரி தாகூருக்கு அவரது 100-வது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். 

பீகாரின் முதல்வராக இரண்டு முறை இருந்த கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கும் மத்திய அரசின் தாமதமான முடிவை வரவேற்கிறோம். இந்த உயரிய சிவிலியன் கவுரவத்திற்காக அவரது குடும்பத்தினருக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழவும், சொந்தக் காலில் நிற்கவும் காரணமானவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது, மற்றும் மறக்க முடியாதது ஆகும். நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பப்படி அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டியது அவசியம் ஆகும்” 

என்று தெரிவித்துள்ளார்.