எம்.ஜி.ஆரும் நானும்! : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி! ( வீடியோ இணைப்பு)

Must read

 
நினைவுகள்: (ஜெயலலிதா பேட்டி: பாகம் 3)
1_2740191g
சிமி: நீங்கள் எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ?
ஜெ: ( பெரிதாக புன்னகைக்கிறார். பிறகு…) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா, எம்.ஜி.ஆர்.!
சிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் ? அவர் ஒரு புதிரான மனிதராக விளங்கினாரா?
ஜெ:  அவர், மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.
சிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா ?
ஜெ:  ஆம். அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள்தான் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  ஆனாலும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
mgr-jayalalithaa-janaki
சிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் பொசசிவ் (possessive) ஆக இருந்தாரா ?
ஜெ: (அதே அகன்ற புன்னகையுடன்) இருந்திருக்கலாம்.
சிமி: ஜெயாஜி. உங்கள் வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா?
ஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.
புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, இருக்கிறது. நிஜத்தில் அப்படி ஒன்று இருக்குமா… அப்படி இருந்தால் அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திக்கவே இல்லை. 
சிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், நீங்கள் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது… பெரும் வெற்றிகளும் பெற்றீர்கள்… இல்லையா ?
ஜெ: மிகச்சரியாக சொன்னீர்கள். எம்.ஜி.ஆர். இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய பணி. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர்  எனக்கு உருவாக்கித் தரவில்லை.
அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை  அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு  ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.
7254605832_b1c476a820_m
தெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.
மறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.
அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.
(தொடரும்)
பேட்டி முதல் பாகம்
பேட்டி இரண்டாம் பாகம்
 
வீடியோ லிங்க்குகள்:
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
 
 
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
https://www.youtube.com/watch?v=Cf2bU9xD-3E
 

More articles

Latest article