வுகாத்தி

சுமார் 30 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றிய வீரரை வெளிநாட்டவர் என கூறி உயர்நீதிமன்றம் அகதி முகாமுக்கு அனுப்பி உள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது சனாவுல்லா இந்திய ராணுவத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார், இவர் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து பல முறை போரிட்டுள்ளார். இவருடைய திறமையை பாராட்டி இவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது 53 வயதாகும் முகமது சனாவுல்லாவின் பெயர் தேசிய குடியுரிமைப் பட்டியலில் இடம் பெறவில்லை. அதை ஒட்டி அவருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டது. பொதுவாக ராணுவம் போன்ற அரசுப்பணிகளில் உள்ளவர்கள் தானாகவே குடியுரிமை பட்டியலில் சேர்க்கப்படுவர் என்பதால் அவரும் இது குறித்து அதிகம் கவனம் கொள்ளவில்லை.

இந்நிலையில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் சனாதுல்லாவை விசாரணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டது. அதை ஒட்டி விசாரணைக்கு சென்ற அவரை உயர்நீதிமன்றம் வெளிநாட்டவர் எனக் கூறி அகதிகள் முகாமுக்கு அனுப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் தமது ராணுவ பணி சான்றிதழ்களை காட்டி உள்ளார். அதனால் அவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்த அரசு இத்த தகவலை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளது.

தீர்ப்பு குறித்து சனாவுல்லா,”30 ஆண்டுகளாக இந்த நாட்டுக்கு சேவை செய்த எனக்கு இந்த தீர்ப்பு மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. இந்த நாட்டுக்கு பணி புரிந்ததற்கு எனக்கு கிடைத்த பலன் இதுதான். என்னைப் போல் பலர் இது போல் பல வருடங்களாக அகதிகள் முகாமுக்கு அனுப்பி உள்ளனர். எனது வழக்கின் மூலம் அவர்களுக்கும் அரசு நீதி வழங்கும் என நம்புகிறேன். நான் ஒருமுழுமையான இந்தியன். வெளிநாட்டவர் இல்லை” என தெரிவித்துள்ளார்.