சென்னை,
நான் அதிமுகவுக்கு விசுவாசமானவன், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக அமைச்சருமான  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ந்தேதி இரவு காலமானதை தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுவரை அதிமுக பொதுச்செயலாளராக  ஜெயலலிதா இருந்தார். இனிமேல் வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்று ஒரு சாராரும், செங்கோட்டையன் தேர்வு செய்யப்படுவார் என்றும், தம்பிதுரைதான்  என்றும் பல்வேறு செய்திகள்  சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சசிகலா, தம்பித்துரை, செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் புதிய பொதுச்செயலாளராக வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து, செங்கோட்டையன்,
“நான் எப்போதுமே அதிமுக விசுவாசிதான். எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லலை,  வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கட்சி தொண்டர்களுக்கு தெரிவி்த்துள்ளார்.