திருவாரூர்:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி  திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு  ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால்,  நிலம் பாழகிறது என்றும், விவசாயத்துக்கு மீண்டும் பயன்படுத்த முடியா சூழல் ஏற்படுவதாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், அவற்றை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.