விளம்பரத் தூதராக ஹ்ரித்திக் ரோஷன் இருக்கும் ஒரு ஜிம்மின் வாடிக்கையாளர் ஹ்ரித்திக் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.

கல்ட்.ஃபிட் ஜிம் , ஹைதராபாத் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர், ஜிம்மின் சேவைகள் குறித்து மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.

ஜிம்மில் அன்லிமிடட் வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்தியும் தனக்கு பயிற்சி வழங்கவில்லை ,கடந்த நவம்பர் 10 மாத பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.17,490 செலுத்தியதாகவும், தினம் பயிற்சிகள் தராமல் ஏமாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 420 மற்றும் 406ன் கீழ் ஹ்ரித்திக் ரோஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தரப்பில், தங்கள் தரப்பு நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருவதாகவும், புகார் கொடுத்த நபர் தங்கள் ஊழியர்களிடம் தவறாகவும், வன்முறையாகவும் நடந்து கொண்டார் என்றும், இந்தப் பிரச்சினைக்கு தங்கள் விளம்பரத் தூதரை இழுப்பது தவறு என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.