மகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி

Must read

12ம் நாளான நேத்திக்கு குலேபகாவலி படத்துல இருந்து குலேபா அப்டிங்குற பாடல் ஒளிபரப்பப்பட, எல்லாருமே எழுந்து ஆடினாங்கன்னு தான் சொல்லனும். அனிருத் இசையில வந்த அந்த பாடல் அந்த அளவுக்கு எல்லாரையும் நடனமாட வெச்சுடுச்சுங்க. அதுக்கப்புறம் தன்னோட அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை வனிதா சொல்ல, தன்னோட குழந்தைகளுக்கு வாழ்த்தும் சொன்னாங்க..

இது ஒருபக்கம் போக, சாக்ஷி கூட, கவின் கடலை போட ஆரம்பிச்சது ரொம்பவே குழப்பமா தான் இருந்துச்சு. ட்ரீம் கர்ல் இப்படி தான் இருக்கனும்னு கவின் சொன்னதுல, சாக்ஷி வந்துட்டதா சொன்னப்பவே சாக்ஷி மேல கவினுக்கு க்ரஷ் வந்துடுச்சோ அப்டின்னு யோசிக்குற அளவுக்கு தான் இருந்துச்சு. அதுக்காகவே வெஸ்டர்ன் ட்ரெஸ் போடுறேன்னு சாக்ஷி சொல்ல, நான் பேசமாட்டேன்னு சொல்றார் கவின். அப்ப பிக்பாஸ் கிட்ட இருந்து ஒரு லெட்டர் வந்துச்சு. அதுல சரவணன் கண்டஸ்டன்ட்ஸ்க்கு கோழி பிடிக்க சொல்லி கொடுக்கனும்னு உத்தரவிட, அதுபடியே நடந்துக்கிட்டார் சரவணன். சரவணன் கோழி பிடிக்குறது எப்படின்னு நடிச்சு காமிக்க, அதேமாதிரியே ரொம்பவே கஷ்டப்பட்டு கோழி பிடிச்சாங்க மற்ற போட்டியாளர்கள்னு சொல்லலாம்.

காலையில டிபன் செஞ்சுட்டு இருந்தாங்க. அப்ப பேசின மதுமிதா, ஓட்ஸ் தனக்கு பிடிக்காதுன்னும், பழைய சாதம் இருந்தா கூட போதும்னும் சொன்னாங்க. அப்ப அதை கேட்டுட்டு சரின்னு சொன்ன ரேஷ்மா, அதுபத்தி மோகன் வைத்யா பேசினப்போ தன்னால தனித்தனியா சமைக்க முடியாதுன்னு சொல்லி மதுமிதாவை திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இந்த பிரச்சனையை இன்னும் எப்படி பூதாகரமாக்கனும்னு சொல்லி, வனிதா இடையில பேசின விதமும் ரொம்பவே கடுப்பாக்குச்சுன்னு தான் சொல்லனும். துவக்கத்துல 2 உணவுகள் சாய்ஸ் கொடுப்போம்னு சொன்னதை ஏத்துக்கிட்ட ரேஷ்மா, இப்ப அதை எல்லாம் ஃபாலோ பண்ண முடியாதுன்னு சொல்லுறது எதுக்காக முதல்ல ஒத்துக்கிட்டாங்கன்னு யோசிக்க வைக்குற அளவுக்கு தான் இருந்துச்சு.

இது ஒருபக்கம் இருக்க, யானை அணிக்கு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். கொடுக்கப்பட்ட சாப்பாட்டை, மிச்சம் வைக்காம சாப்பிடனும்னு சொன்னார் பிக்பாஸ். அதுப்படியே சாப்பிட்ட அந்த அணிக்கு, 280 மதிப்பெண் கொடுக்கப்பட்டுச்சுன்னா பாத்துக்கோங்களேன்… சரி இதுதான் இன்னிக்கு கடைசி டாஸ்க் போலன்னு நினைச்சா, வீட்ல இருந்து ஒருத்தரை வெளியேற்றனும்னு டாஸ்க் கொடுத்துட்டு, இது ப்ரான்க் டாஸ்க் தான், மீராவை ஓட்டனும்னு பிக்பாஸ் சொல்ல, மீராவை எல்லாரும் ஓட்டீட்டாங்கன்னு தான் சொல்லனும்.

கடைசியா சாண்டியோட பிறந்தநாளை கொண்டாடின பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்தது சாண்டியோட குழந்தை தொடர்பான வீடியா தான். அதை பார்த்து, சாண்டி அழுது புழம்ப, அவருக்கு அவரோட குழந்தை படம் கொண்ட ஒரு தலையனை கொடுக்கப்பட்டுச்சு. அதை பார்த்துட்டே அவர் கண்ணீர்விட்ட படி, தூங்கினதும் பார்வையாளர்களோட மனசை நெருடும் விதமாவே இருந்துச்சுங்க..

More articles

Latest article