பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் ப்ராசஸ் இன்னிக்கு தான் நடக்கப்போகுது. கிட்டத்தட்ட 10 கோடி வாக்குகள் விழுந்திருக்குறதா விஜய் டிவி வெளியிட்டிருக்குற ப்ரோமோவுல கமல்ஹாசன் சொல்லியிருக்கார். உண்மையான முகத்தை காட்டுங்கன்னு சொன்னதுக்கு, என்னமாதிரிலாம் காட்டிருக்காங்க பாருங்கன்னு சொல்லுற கமல்ஹாசன், அதுக்கப்புறம் மக்களாகிய நீங்கள் உங்களுடைய வாக்கு வலிமையை காட்டீருக்கீங்கன்னு சொல்லி, உங்களுடைய தீர்ப்பு எப்படி இருக்குன்னு பார்ப்போம்னும் சொல்றார்.

இது ஒருபக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டை விட்டு முதல்ல வெளியேறப்போகும் நபர் பாத்திமா பாபு தான் அப்படின்னு தகவல் வெளியாகியிருக்கும். இதுவரை பதிவான வாக்குகள்லியே அதிகபட்ச வாக்குகளை மதுமிதா வாங்கியிருக்குறதாகவும், குறைந்தபட்ச வாக்குகளை பாத்திமா பாபு வாங்கியிருக்குறதாகவும் தகவல்கள் கசிந்திருக்குன்னு சொல்லலாம். நூலிலைவு வித்தியாசத்துல எவிக்ஷன்ல இருந்து சாக்ஷி அகர்வால் தப்பிக்கும் நிலை இருப்பதாகவும் சொல்லப்படுது.

ஆனாலும் இன்னிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு நாம பொருத்திருந்து தான் பார்க்கனும்.

Video: [embedyt] https://www.youtube.com/watch?v=9OPs5HMOuvM[/embedyt]