கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

Must read

சிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா  உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கலவர சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. வெளியூர் குண்டர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும்  கலவரத்தை ஏற்படுத்துவர் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். (தூத்துக்குடி – 66 , நெல்லை  – 45 , நாமக்கல் -24 , மதுரை – 34 , விருநகர் -31 , தேனி – 39 ,   திண்டுக்கல் – 53 ,  ராமநாதபுரம் -10 , சிவகங்கை -45 .)

இந்த நிலையில்…  நியாயமாகப் பார்த்தால், கவலவரத்தில் ஈடுபடுவோரை எதிர்த்து நிற்பது எப்படி, அவர்களை ஒடுக்குவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் நடந்துகொள்ள வழியில்லை. ஆகவே இயல்பாக – நேர்மையாக – யோசிப்போம்.

அதாவது.. கலவரத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வது எப்படி?

வீட்டில் சமையல் கேஸ் இருக்கிறதா என்பதை சோதியுங்கள். இல்லாவிட்டால் உடனே புது கேஸ் வராது. ஆகவே இன்டக்சன் ஸ்டவ் சரியாக வேலை செய்கிதா என்று பாருங்கள். அதோடு, மண்ணெண்ணெய் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குறைந்த பட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் இருக்கிறதா என பாருங்கள். இல்லாவிட்டால் வாங்கி வையுங்கள்.

அவ்வப்போது உணவு தயார் செய்வதைவிட, தயிர்., புளி சாதங்கள் போல செய்து வையுங்கள். இட்லியும் நல்லதே.

வீட்டில் உடல் நலம் இல்லாதவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பேட்டரிகள் வாங்கி வையுங்கள். கரண்ட் கட் ஏற்பட்டால் உதவும்.

செல்போனை தேவையின்றி பயன்படுத்தாதீர்கள்.சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் சிரமமாகிவிடும்.

பால் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் பால் பவுடர் வாங்கி வையுங்கள்.

டிவி இருந்தாலும், டிரான்ஸிஸ்டர் ரேடியே வேலை செய்கிறதா என்பதை சரி பாருங்கள்.

தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.  செல்லும்போது, செல்போனில் பேஸ்புக் பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற தேவையற்ற வேலையை செய்யாதீர்கள். ரேடியோவை கேளுங்கள்.

வந்தவுடன் உங்களது வாகனத்தை வீட்டின் வெளியே சாலையில் நிறுத்தாதீர்கள். வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்துங்கள். அதற்கு வசதி இல்லாவிட்டால் தெரிந்தவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி வையுங்கள்.

மிக முக்கிய தேர்வு இருந்தால் ஒழிய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர் யாரேனும் உதவி கேட்டால் அவசியம் செய்யுங்கள். நன்கு விசாரித்துவிட்டு, உங்களது இல்லத்தில் தங்க அனுமதியுங்கள். இருக்கும் உணவை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அப்புறம்..

கதவுகளை சாத்திக்கொண்டு,  “இந்த நிலையும் மாறும்” என்ற நம்பிக்கையோடு தியானம் செய்யுங்கள்.

வேறென்ன செய்வது?

More articles

Latest article