சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் வீடு வீடாக ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வில் சென்னையில் மட்டும் 661 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது என்று அறிவித்து உள்ளது.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியும் இதேபோல் 15 மண்டலங்களிலும் வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி நடத்தி வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், நேரடியாகவே சென்று வீடுகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது.

இன்று வரை, 42,3,287 வீடுகளில், 67,56,897 நபருக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1973 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளித்ததில்,1312 பேர் குணமடைந்து உள்ளனர்.

மீதமுள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும்,  இவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை இருக்கின்றன, இது சாதாரண பிரச்சனையாக கூட இருக்கலாம். இருப்பினும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

இவர்களில் யாருக்காவது, மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில்  ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் அதிகமான கொரோனா நோய் தொற்று அதிம் உள்ளது.

அண்ணாநகரில் 125 பேரும், வளசரவாக்கத்தில் 93 பேரும், திருவொற்றியூரில் 92 பேரும், ராயபுரத்தில் 72 பேரும், தண்டையார்பேட்டையில் 59 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.

இப்பகுதி மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டை விட்டு வெளியே வருகையில் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை மக்களும், தங்களது உடல்நிலை குறித்த உண்மைத் தகவலை மாநகராட்சி அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டு காப்பாற்றிக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.