பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? என்று திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் ஆட்சபம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஆனால் நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதி, மற்றவர்களை “UPSC தேர்வு எழுதுங்கள்” என்று சவால் விடுகிறார், மேலும் அவர் ஒரு IPS அதிகாரி என்று அடிக்கடி பெருமை பேசுகிறார்.

நீதிமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளுக்கும் நீதிமன்ற முத்திரைத்தாளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் எந்த வகையில் சேர்க்கப்படும் ஐ.பி.எஸ். அதிகாரி ? என்று திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அப்படிப்பட்டவர் எப்படி கோவை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்? ஒரு முத்திரைத் தாளில் உள்ள வித்தியாசம் மூட தெரியாதவர், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றுவதில் எவ்வாறு திறம்பட பங்களிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.