சென்னை

மிழகத்தில் பொது மின் கட்டணம் குறைப்பால் வீடுகளில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே.  இதனால் பல குடியிருப்புகளில் பொது மின் கட்டணமும் மிகவும் உயர்ந்தது.  இதையொட்டி மின் பயனர்கள் கட்டணக் குறைப்பு கோரி தமிழக மின் வாரியத்துக்குக் கோரிக்கை விடுத்தது.

எனவே தமிழகத்தில், அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.5.15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், 3 மாடிகள் உடைய வீடுகளைக் கணக்கெடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.