ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு: சட்டசபையில் மசோதா தாக்கல்?

சென்னை :

மிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அதற்காக சட்ட திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. தற்போது பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று 3வதுநாளாக சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இநத் நிலையில்,  தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள்  செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 2 மாநகராட்சிகளை தமிழக அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது.  இதுவரை நகராட்சிகளாக இருந்து வரும் ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று அறிவித்ததும், அதற்காக சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Hosur, minisster velumani, nagarkovil, tn assembly, tn budget session19, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஓசூர், தமிழக சட்டமன்றம், நாகர்கோவில், மாநகராட்சிகளாக தரம் உயர்வு
-=-