ன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் ஆலயத்தில் இன்று ராகு,கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  ராகு,கேது பகவானுக்கு அபிஷேகங்களும்,தீபாராதனையும் நடைப்பெற்றபோது ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடகராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடபெயர்ச்சி ஆகும் போது மகா தீபாராதனை நடைபெறும். இதை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக மனச்சோர்வு நீங்குவதாகவும்,  மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம்.

திருவேற்காடுசென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாத ருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

முண்டகக்கன்னியம்மன்: சென்னை மைலாப்பூரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

திருவொற்றியூர் வடிவுடிடையம்மன்:  ஆதிசேஷன்  பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடி வுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள்.  ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

நாகர்கோவில்:  இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும். இங்கும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருச்செங்கோடு: ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேரையூர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.

கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.

காளிவழிபாடு: மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

பஞ்சமிதிதி: நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார். பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம்.

புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

சர்ப்பதோஷமுள்ளவர்கள்  பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.

நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும்.

ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.

ராகு கேதுவை வணங்கி வாழ்வில் சுபிட்சம் பெறுவீர்.