திகில் படம்.. " நான் யார்"

Must read

naan yaar stills 14
‘ஜெய் ஆகாஷ்  ஹீரோவாக நடிக்கும் “நான் யார்?’ படத்தில் அவருக்கு ஜோடியாக லண்டன் மாடல் அழகி பிரியா நடிக்கிறார்.
கதை ரொம்ப திகிலாக இருக்கிறது.
 
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப விஞ்ஞானி சிவாவுக்கு லண்டனில் வேலை கிடைக்கிறது. புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் லண்டனுக்குச் சென்று சந்தோஷமாக ஊர் சுற்றிப் பார்க்கிறார்.  இந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்து நடக்க, நூலிழையில் உயிர் தப்புகிறான். அந்த விபத்துக்குப்பிறகு சிவாவின் பேச்சு, நடவடிக்கைகள் முற்றிலும் மாற்றமடைகின்றன.
தன்னுடைய பெயரை மட்டும் சிவா என்று சரியாக சொல்பவர், புதிய மொழிகளைப் பேசுவதும் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறான். பூப்போன்ற இதயத்துடன் இருந்த சிவா, புயல் போன்ற ஆக்ரோஷ இளைஞனாக மாறுகிறார்.  குறிப்பிட்ட சில ரவுடி கும்பலை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்.
 
Naan yaar-1
ஆனால்  ஸ்பிலிட் பெர்சனாலிட்டி, ஆவி போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் யாரும் எதிர்பாராத புதிய திருப்பம் கதையில் இருக்கிறதாம். 
படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கார் மற்றும் ஹெலிஹாப்டர் சேஷிங் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஜாய்மதி நடனம் அமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களை கபிலன் எழுத இசை அமைக்கிறார் யு.கே.முரளி.
இத்திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இம்மாதம் மே 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 
 
 

More articles

Latest article