டில்லி

பிரபல இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனத்தின் உரிமைய ரத்து செய்து அந்நிறுவனம் இயங்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் என்னும் பெயரில் 1996 ஆம் வருடம் தொடங்கப்பட்ட்து. இந்த தொண்டு நிறுவனம் கல்வி, கிராம முன்னேற்றம், மருத்துவம், கலை, கலாச்சாரம், மற்றும் ஆதரவற்றோர் நலம் உள்ளிட்டவைகளுக்கு உதவி வந்தது. இந்த தொண்டு நிறுவன தலைவியாக சுதா மூர்த்தி பொறுப்பு வகிக்கிறார்.

சமீபத்திய அரசு உத்தரவுப்படி வெளிநாட்டு உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் தங்களது கணக்குகளை முழுவதுமாக அரசிடம் அளித்து அனுமதி பெற வேண்டும். அதை ஒட்டி ஆறு வருடங்களாக கணக்குகள் அளிக்காத 1755 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த வருடம் இந்திய உள்துறை அமைச்சகம் நோட்டிஸ் அனுப்பியது. இவற்றில் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனும் ஒன்றாகும்.

இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் தங்களுக்கு தற்போது வெளிநாட்டு உதவிகள் வருவதில்லை எனவும் அதனால் கணக்குகள் அளிக்க தேவை இல்லை எனவும் தெரிவித்தது. ஆனால் அன்னிய செலாவணி சட்டப்படி வெளிநாட்டு உதவி பெறாத வருடங்களில் அவ்வாறு உதவிகள் வரவில்லை எனக் குறிப்பிட்டு கணக்குகள் அளிக்கபட வேண்டும்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆறு வருடங்களாக கணக்குகள் அளிக்காததால் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்லது. அத்துடன் அந்த நிறுவனம் இயங்க தடை விதித்துள்ளது.