டெல்லி: வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை குறைக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை அளித்துள்ளது. தமது அறிவுரையில் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளதாவது:

100% தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்திற்குள்ளேயும் போக்குவரத்திற்கு எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. ரெம்டெசிவிர் போன்ற கொரோனா சிகிச்சை மருந்துகள் இருப்பு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சையளிக்க எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம். மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.  தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்ப்பதுடன் வெளியாட்களை வீட்டிற்குள் சேர்ப்பதையும் தவிர்க்கலாம். இரும்பு ஆலைகள் மூன்றரை நாளுக்கு பதில் அரைநாள் என்ற அளவில் மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைக்கலாம் என்று கூறி உள்ளது.