ஹோலி தள்ளுபடி: ரூ. 1,499க்கு விமான டிக்கெட்! ஏர் ஏசியா அதிரடி!

Must read

 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏர்ஆசியா விமான நிறுவனம் அதிரடி சலுகை கட்டணங்களை அறிவித்து உள்ளது.

இந்த அதிரடி சலுகை ஹோலி பண்டிகை அன்று தொடங்கி ஜூன் 30ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்து உள்ளது.

வரும் 13ந்தேதி ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஏர் ஏசியா விமான நிறுவனம் 1,499 ரூபாய்க்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

இந்த சலுகை டிக்கெட் மூலம் மார்ச் 12ந்தேதி வரை மட்டுமே புக் செய்ய முடியும். ஆனால், புக் செய்யப்படும் விமான டிக்கெட்டுகள் மூலம் மார்ச் 13ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த 1499 ரூபாய் ஹோலி ஆபர் டிக்கெட் மூலம், ஹைதராபாத் – பெங்களுர் மற்றும், புனே,  ஸ்ரீநகர் போன்ற வழித்தடங்களிலும் பயணம் செய்ய முடியும் என்று ஏர் ஆசியா அறிவித்து உள்ளது.

மேலும் 1,999 ரூபாய் சலுகை டிக்கெட் மூலம் இம்பாலில் இருந்து கவுகாத்தி வரையும், 2,999 சலுகை டிக்கெட் மூலம் புனேவில் இருந்து ஜெய்ப்பூர் வரையும், 2,399 சலுகை டிக்கெட் மூலம் புனேவில் இருந்து பெங்களூரு மற்றும் விசாகபட்டினம் முதல் பெங்களூரு வரையும் விமானப் பயணம் செய்யலாம்.

இதேபோல இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்களும் சில சலுகை அறிவிப்புகளை அறிவித்துள்ளன.

More articles

Latest article