மாச்சலபிரதேசத்தில் பள்ளி பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து ஏற்பட்டத்தில்  மாணாக்கர்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. பிரதமர் மோடி உயிரிழந்தோர் குடும்பத்துககு  தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் குல்லு பகுதியில், தனியார் பேருந்து ஒன்று இன்று காலையில், மாணவர்கள் பயணிகள் என ஏராளமானோரை ஏற்றிச் சென்றனர். இந்த பேருந்தானது,  மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. சைன்ஜ் பள்ளத்தாக்கில் உள்ள குல்லுவில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சைஞ்ச் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது

இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்தவர்களில்   மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புபடையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள்,  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் (PMO) அறிவித்து உள்ளது. இதுகுறித்து பிரதமர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “இமாச்சல பிரதேசத்தின் குலுவில் நடந்த பேருந்து விபத்து இதயத்தை உலுக்குகிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார். காயமடைந்த ஒவ்வொருவருக்கும் உடனடி நிவாரணமாக 15,000 வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் (CMO) தெரிவித்துள்ளது.

2 லட்சம் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முழு சம்பவம் குறித்தும் ஏ.டி.எம் குலு விசாரணை நடத்துவார் என்றும் அவர் கூறினார்.

மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள  டிவீட்டில், விபத்தில் தங்கள் குழந்தைகளையும் அன்புக்குரிய வர்களையும் இழந்து வாடும் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

மீட்புப் பணிகளை மேற்பார்வையிட, விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு நிதி ஆணையர் வருவாய் மற்றும் கோட்ட ஆணையர் மாண்டிக்கு தலைமைச்செயலர் ராம் சுபாக் சிங் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாக குழுக்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.