பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தினர். இதனால், மாநிலம் முழுவதும் உளள  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்தது.

இதற்கிடையில், ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதைடுத்து வழக்கு சுமார் 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பல்வேறு உதாரணங்கள் மற்றும் முந்தை உத்தரவுகளை சுட்டிக்காட்டி காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில்,  இன்று தீர்ப்பு வழங்கப்படும என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பெங்களூரு உள்பட பல பகுதிகளில் இன்று  முதல் வரும் 21ஆம் தேதி வரை ஒரே இடத்தில் மக்கள் கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள்! வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை