டில்லி

பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலாக்களில் அமைச்சரவை அமைக்க உதவ மேலிடப் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை  தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்ய நாத் மீண்டும் முதல்வராக உள்ளார்.

ஆயினும் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் முதல்வர்கள் யார் என்று இன்னும்  தேர்வு செய்யப்படவில்லை. இதையொட்டி பாஜ வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர்களைத் தேர்வு செய்து அமைச்சரவை அமைக்க மேலிட பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.

அதன்படி உபி.க்கு தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை தலைவராக பாஜ தேசிய துணைத் தலைவரான ரகுபர் தாஸ், உத்தரகாண்ட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை தலைவராக மீனாட்சி லெகி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைப் போல் மணிப்பூருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணைத் தலைவராக கிரண் ரிஜிஜூ, கோவாவுக்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், துணைத் தலைவராக இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரை நியமித்து பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்குச் சென்று அமைச்சரவை அமைக்க பணியாற்ற தொடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.