150 கோடி ரூபாய்… அதிக சம்பளம் வாங்கும் இந்திய நட்சத்திரம் யார் ?

Must read

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ஷாஹ்ருக் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இருந்து வருகிறார்கள்.

தங்கள் படங்களுக்கு 100 கோடி ரூபாய் வரை இவர்கள் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பூஷன் குமாரின் டி-சீரீஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஆதிபுருஷ் என்ற புராணப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகர் பிரபாஸ்-க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதில் இருந்து பிரபாஸ் காட்டில் மழை பெய்கிறது.

தெலுங்கு மட்டுமன்றி பாலிவுட்டிலும் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபாஸை வைத்துப் படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் படத்தை தயாரிக்கும் பூஷன் குமார் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் அகில இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபாஸுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தரவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பளம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக ஊதியம் வாங்கும் நட்சத்திரமாக பிரபாஸ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article