கமல் நடிக்கும் ‘விக்ரம்’ மார்ச்சில் ரிலீஸ் ஆகுமா ?

Must read

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.

கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

2022 ம் ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் கமலஹாசன் கொரோனா காரணமாக சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், இத்திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் சில நாள் ஓய்வில் இருக்கக்கூடும் என்பதால் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் கமலஹாசனால் தீவிரமாக ஈடுபட முடியாது என்று கூறப்படுகிறது.

இதனால் ‘விக்ரம்’ பட ரிலீஸ் மார்ச்-க்குப் பிறகே இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

More articles

Latest article