திருட்டு வழக்கில் முன்னாள்  அமைச்சர் சின்னய்யாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை:

திருட்டு வழக்கில் முன்னாள்  அமைச்சர் சின்னய்யா உட்பட ஏழு பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆலந்தூர் சரவணன் என்கிற சினி சரவணன் என்பவர், கடந்த 9/06/2017 அன்று தனது  அலுவலகத்தை உடைத்து  சிசிடிவி  கேமராக்களை அகற்றி    ஐந்து  லட்சத்து   எட்டாயிரம்  பணம்  மற்றும்  பல  ஆதரங்களை  முன்னாள் அமைச்சர்  சின்னையா, ஆலந்தூர் வெங்கட்ராமன்,  மடிப்பாக்கம் காவல்துறை உதவி  கமிஷனர்  கோவிந்தராஜ், ஆதம்பாக்கம்  இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட  ஏழு பேர் திருடியதாகவும், அவர்கள் மீது முதல்  தகவல்  அறிக்கை ( FIR )  பதிவு  செய்ய காவல் நிலையத்தில் மறுக்கிறார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த ஏழு பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும கோரியிருந்தார்.

இன்று இந்த வழக்கு, நீதிபதி ரமேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முடிவில், முன்னாள் அமைச்சர் சின்னையா உட்பட எழுவரையும் குறிப்பிட்ட வழக்குக்காக விசாரிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

திருட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


English Summary
highcourt order to investigate former minister chinnaiyah regarding theft case