சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக  8000 காலி பணியிடங்களை தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில் காலியாக பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு தொடர்பாட்டிருந்தது. மனுவில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு காலி பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பதாகவும், 2016ஆம் ஆண்டு மின்சார துறை 900 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன.  மீதமுள்ள 2500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கள உதவி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அப்படியே இருக்கிறது  அதை உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, , ‘ 2016ஆம் ஆண்டு தேர்வானவர்களை 2021ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களில் நிரப்ப முடியாது என்று கூறியதுடன், 29ஆயிரம் கள உதவிபணியாளர்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியது.

அத்துடன் முதற்கட்டமாக 8 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மின்சாரத்துறை உத்தரவிட்ட நீதிபதிகள்,  அதில் கேங்க்மேன்களை உதவி களப்பணியாளர்களாக வேலைபார்க்க வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டு உள்ளது.  உதவி களப்பணியாளர்கள் காலிப்பணியிடம் தற்காலிகமானது. தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.