சென்னை: தமிழ்நாட்டில், சினிமா தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்-ன் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்   சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கியதில் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஊத்துக்கோட்டை வேல்ஸ் மருத்துவமனைக்கு சான்று வழங்கிய புகாரில் சி.விஜயபாஸ்கர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பாக  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னையில் 5 இடங்கள், சேலத்தில்  3இடங்கள், மதுரை, தேனி ,திருவள்ளூர், தாம்பரம் என மொத்தம் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.