டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

Must read

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திட்டமிட்டப்பட்டு தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவின் நிகழ்ச்சியாக, போட்டியில் பங்குபெறும் நாட்டு அணியினர் அணிவகுத்து செல்வது வழக்கமான நடைமுறை. அதன்படி, இந்திய வீரர்களுக்கு தலைமையேற்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

இந்த ஆண்டு முதன்முறையாக பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் தேசியக்கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அjன்படி, மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகிய வீரர்கள் தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர். முன்னதாக அவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் இன்று, இந்திய தேசிய கொடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து, அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அத்துடன்.  டோக்கியோ 2020 திறப்பு விழாவுக்கு முன் எனது தேசத்தின் கொடியுடன் நிற்கிறேன் என குத்துச்சண்டை வீராங்கனை, மேரி கோம் ஹாக்கிக கேப்டன் மன்பிரீத் சிங் படத்துடன் பதிவிடப்பட்டுஉள்ளது.

இந்த டிவிட் வைரலாகி வருகிறது.

டோக்கி ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 205 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்குகொள்கின்றனர். இந்த  ஒலிம்பிக் திருவிழா ஜப்பானின் டோக்கியோவில் இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது.

More articles

Latest article