பெங்களூரு:

அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், விஜய் மல்லையாவில் பீர் தயாரிப்பு நிறுவனமான யூபிஹெச்எல் நிறுவனத்தின் ரூ. 74 லட்சம் மதிப்புள்ள பங்குகளை ஹைனெகென் பீர் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.


விஜய் மல்லையாவின் யூபிஹெச்எல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க பல ஆண்டுகளாக ஹைனெகென் நிறுவனம் முயற்சித்து வந்தது.

இந்நிலையில், பீர் தயாரிப்பு நிறுவன பங்குகளை வைத்து கிங்க்ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸுக்காக விஜய் மல்லையா யெஸ் பேங்கில் கடன் பெற்றார்.

மேலும் எவ்வித உத்தரவாதமும் இன்றி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்றார்.
யெஸ் பேங்கில் பெற்ற கடனுக்காக விஜய் மல்லையாவின் யூபிஹெச்எல் பீர் தயாரிப்பு நிறுவனத்தை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

ஸ்டேட் வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் ரூ.12 ஆயிரம் கோடி சொத்துகள் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் யூபிஹெச்எல் பீர் தயாரிப்ப நிறுனத்தின் ரூ. 74 லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதன் மூலம், ஹைனெகென் பீர் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.