டில்லி

டுத்த 5 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வட இந்தியாவில் பல இடங்களில் புழுதிப் புயல், மழை போன்றவை நிகழ்ந்து வருகின்றன.   தமிழ்நாட்டில் சென்னை நகரை தவிர பல இடங்களில் மழை பெய்வதாக தகவல்கள் வெளியாகின்றன.   இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ”மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, கர்நாடகாவின் சில பகுதிகள், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் பரவலாக பலத்த காற்றுடன் இன்று மழைபெய்யும்.   கர்நாடகம், தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மழை மட்டும் பெய்யும்.

விதர்பா, ஒரிசாவின் உள் மாவட்டங்களில் கடும் வெயில் அடிக்கும்.  ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சில இடங்களில் புழுதிக் காற்றும் கனமாக வீசும்”  என அறிவித்துள்ளது.