திருவனந்தபுரம்: கேரளாவில் 21வயது எக்ஸ் இ வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநில மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், லாக்டவுன் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த உருமாறிய தொற்று ஒரு மாதத்திற்கு முன்பே கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் முதல்வாரத்தில், மும்பையில் எக்ஸ்இ புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்தியஅரசு மறுத்தது. ஆனால், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் 21வயது இளைஞருக்கு எக்ஸ்இ வகை கொரோனா உறுதியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொல்லத்தை சேர்ந்த 21 லயது இளைஞருக்கு,  மேற்கொள்ளப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் சமீபத்திய உருமாறிய கொரோனாவான எக்ஸ் இ வகை வைரஸ் தொற்று அந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தில் எக்ஸ் இ வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கொல்லம் பகுதியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் XE வகை புதிய கொரோனா பாதிப்பு இல்லை! மறுக்கிறது மத்தியஅரசு…