சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கம்யூனிஸ்டு கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணு, தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

வயது மூப்பு காரணமாக தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த , இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த வாரத்தில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் மட்டும் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனைடியில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார்.

இந்த நிலையில் தொற்று பாதிப்பில் இருந்து நல்லகண்ணு முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும்,  அவரது  உடல் உறுப்பு செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவருக்கு நேற்று எடுக்கப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று நெகடிவ் என ஆய்வறிக்கை வந்தது. இதையடுத்து, நல்லக்கண்ணு நேற்று மாலை வீடு திரும்பினார். அவரை  மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், மருத்துவமனை நிர்வாகிகள் நல்லகண்ணுவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

95 வயதிலும் எந்தவித பதற்றமுமின்றி, சிகிச்சை பெற்று, கொரோனாவை வெற்றுள்ள நல்லக்கண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.