பிரதமர் அலுவலகத்துக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் உயர்நீதிமன்றம் அபராதம்

Must read

லகாபாத்

ரு பொது நல மனுவுக்கு பதில் அளிக்க தாமதம் செய்த சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கணக்கு தணிக்கை அலுவலகம்  அளிக்கும் அறிக்கைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி ஒரு வழக்கறிஞர் பொது நல மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.   அந்த மனுவில் அவர் மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகங்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 அறிக்கைகள் அளிக்கும் போது அவற்றில் வெறும் 10 மனுக்கள் மீது மட்டுமே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது.     பிரதமர் அலுவலகம் மற்றும் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்ட இந்த உத்தரவில் ஒரு மாதத்தில் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.      ஆனால் இது குறித்து பிரதமரின் அலுவலகம் மற்றும் சட்ட அமைச்சகம் எந்த ஒரு பதிலும்  அளிக்கவில்லை.

இதை யொட்டி உயர்நீதிமன்றம், “அரசு இவ்வாறு பதில் அளிக்காததது உயர்நீதிமன்றத்துக்கு மிகவும் அதிருப்தியை அளிக்கிறது,     உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு இடுகிறது.   அத்துடன் குறித்த நேரத்தில் பதில் அளிக்காத பிரதமர் அலுவலகத்துக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் ரூ.5000 அவராதம் விதிக்கிறது”  என உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article