ம்மு

ல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்து மீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார்.

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு ஜம்முவின் எல்லைப் பகுதியான ஆர் ஏச் புராவில் உள்ள பாகிஸ்தான் படையினர்  அத்து மீறிய தாக்குதலில் ஈடுபட்டனர்.   பொதுமக்கள் வசிக்கும் இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்தி உள்ளனர்.    ஆர்னியா மற்றும் பல்வேறு கிராமங்களில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இதற்கு பதிலடியாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதலில் இறங்க்னர்.    இந்த தாக்குதலில்  ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மரணம் அடைந்துள்ளார்.     பாகிஸ்தான் வீரர்கள் பின் வாங்கி உள்ளனர்.    பாகிஸ்தான் தரப்பில் நிகழ்ந்த உயிர்ச் சேதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இதைத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகளையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.