மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….!

Must read

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தில் வரும் மெஹர்சைலா பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது.

இதையடுத்து சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மதன் கார்கி, பிரேம்ஜி, பவதாரணி ஆகியோர் ட்விட்டர் ஸ்பேஸில் வந்தார்கள்.

நான் மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டது. இன்று நான் இங்கு இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம். என்னிடம் யார் பேசினாலும் என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி தான் பேசுவார்கள். அனைவருக்கும் இது போன்று அமையாது, கிடைக்காது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். இனிமே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், எல்லாமே நல்லதா நடக்கும் என சிம்பு பேசியுள்ளார்.

More articles

Latest article