தென்னிந்திய திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பிறகு நடிகர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக திகழும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ராட்சசன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு அவர்கள் தனது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் எல்வின் உடன் இணைந்து தமிழ் திரையுலகின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர், இயக்குனர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.