சென்னை: பிரபல சின்னத்திரை நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி (வயது 70), உடல்நலம் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக  காலமானதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.


நடிகர் அமரசிகாமணி  சிலநாட்களாக பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  அமரசிகாமணி சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நடிகர் அமரசிகாமணி பல்வேறு திரைப்படங்கள், டிவி சீரியல்கள், ஆகியவற்றில் இவர் நடித்துள்ளார் .  நடிப்பு மட்டும் அல்லது கவிதை எழுதுவதிலும் வல்லவர். தனது கவிதைகளுக்கான இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழகஅரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

அமரசிகாமணியின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், நாடக கலைஞர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகர் ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் , விஜயகாந்த் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் சொந்தம், மின்னூஞ்சல், உறவுகள் என  gy சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். நடிகர் அமரசிகாமணி காலமான செய்தியை அவரது மகன் பார்த்திபன் அமரசிகாமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.