முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு கோரி மனுத்தாக்கல்….

Must read

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஏற்கனவே அவரது முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தறnபாது  ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

துணை நடிகை சாந்தினி என்வருடன் குடிதனம் நடத்தி வந்தாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்  மீது புகார் அளிங்ககப்பட்டது. நடிகை சாந்தினி, , சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி  கொடுத்த புகார் மனுவில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக மணிகண்டன், என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னுடன் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாா். அவருடன் இருந்த காலக்கட்டத்தில் 3 முறை கருவுற்றேன். அந்த கருவை வலுக்கட்டாயமாக அதை கலைக்கச் செய்தாா். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து மணிகண்டன் மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

முன்னதாக,   மணிகண்டனின் நண்பா்கள், அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியா்கள், மருத்துவா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்து, தகவல்களை திரட்டினா். இதன் ஒரு பகுதியாக மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பாதுகாவலராக இருந்த கௌரீஸ்வரன், உதவியாளா் சரவணப்பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு  ஆஜா்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி, மணிகண்டன் மீதான பாலியல் வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருவரும் விருப்பத்துடன் தான் பழகியுள்ளதால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது என  நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மணிகண்டன் தரப்பில், ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிகிறது.

More articles

Latest article