டிஎன்பிஎல் தொடர் – அஸ்வினின் திண்டுக்கல் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!

Must read

தூத்துக்குடி: டிஎன்பிஎல் தொடரில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம்பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, தூத்துக்குடி அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது நடந்துவரும் டிஎன்பிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கும் நடைபெற்றது. இதில் டாஸ்வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அஸ்வின் 28 பந்துகளை மட்டுமே சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். அவர் 3 சிக்ஸர்கள் அடித்தார். முடிவில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி.
தூத்துக்குடி சார்பில் செந்தில்நாதன், குமரேசன் மற்றும் மூர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 174 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய தூத்துக்குடி அணியின் வீரர்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. நாதன் மட்டுமே 38 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது தூத்துக்குடி அணி. இதன்மூலம், இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது திண்டுக்கல் அணி

More articles

Latest article