மகேந்திரசிங் தோனி ராணுவப் பயிற்சிபெறும் இடம் எது தெரியுமா?

Must read

ஸ்ரீநகர்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து விலகி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கிரிக்கெட் வீரர் தோனி, காஷ்மீரின் புலவாமா பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலவாமா என்ற இடத்தில்தான், துணை ராணுவப் படைகளின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி 2 மாதகாலப் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தோனி தேர்வு செய்திருப்பது இந்திய ராணுவத்தின் விக்டர் பிரிவாகும். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிவரை, விக்டர் படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் தோனி.

இந்த விக்டர் படையானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா, சோபியான், அனந்த்நாக், குல்கம் மற்றும் புட்காம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தோனி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட புலவாமாவில் பயிற்சிபெற்று வருவதால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

More articles

Latest article