தேசிய கீதத்தில் திருத்தம் கோரும் பாஜக அமைச்சர்

Must read

ண்டிகர்

தேசிய கீதத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என அரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழை அன்று காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.   இந்நிலையில் அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.   இது குறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர், “தேசிய கீதத்தில் ‘அதிநாயக’ என ஒரு வார்த்தை உள்ளது.   அதற்கு சர்வாதிகாரி என்பது பொருள் ஆகும்.   நமது நாட்டில் ஜனநாயகம் உள்ளது,  சர்வாதிகாரம் இல்லை.   அதனால் தேசிய கீதத்தில் உள்ள அதிநாயக என்னும் வார்த்தை நீக்கப்பட வேண்டும்”  என கோரிக்கை விடுத்துள்ளார்.

ரிபுன் போரா கொண்டு வந்த தனி நபர் தீர்மானத்தில், “தேசிய கீதத்தில் குறிப்பிடப்படுள்ள ‘சிந்து’ என்னும் இடம் இப்போது இந்தியாவில் இல்லை.  அத்துடன் இந்தியாவின் வடகிழக்கு பகுதியைப் பற்றியும் குறிப்பிடவில்லை.    ஆகையால் சிந்து என்னும் வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு இந்தியா என மாற்றி அமைக்க வேண்டும்”  என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article