நொய்டா

த்திரபிரதேச மாநில சாலை விபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்கள் மரணம் அடைந்தனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் டில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது யமுனா எக்ஸ்பிரஸ் வே எனப்படும் யமுனா அதிவிரைவுச் சாலை.   இந்த சாலை கடந்த 2012ஆன் ஆண்டு அப்போதைய உ.பி.  முதல்வர் அகிலேஷ் யாதவால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.   இந்த சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று ஒரு காரின் மீது எதிரே வந்த கனரக வாகனம் நிலை தடுமாறி மோதி உள்ளது.   அந்தக் காரில் பயணம் செய்த எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களின் உடல் ஆய்வுக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.