இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரை 103 டெஸ்ட், 236 ஒரு நாள் போட்டிகள் 28 டி-20 போட்டிகளில் விளையாடி 707 விக்கெட்டுகளை எடுத்துள்ள 41 வயதான ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.